எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து, பிரதான முனையங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் போதிய இருப்புக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது குறித்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கை
இதேவேளை, விநியோகஸ்தர்களின் எரிபொருள் ஓடர் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான எரிபொருள் பௌசர்களை ஈடுபடுத்த இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam