ஜனாதிபதித் தேர்தலில் எந்தச் சின்னத்தில் களமிறங்குவது: ஆராய்கின்றார் ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஆராய்ந்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும் அன்னம் ஆகிய சின்னங்கள் இல்லாமல் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் பெயர்
இந்நிலையில் பொதுச் சின்னமாக இருந்தால் ஜனாதிபதியை ஆதரிக்க பல தரப்புகளும் முன்வந்துள்ளதால் தற்போது அந்தச் சின்னம் பற்றி ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் என்பன உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 8 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
