வவுனியாவின் பெரும் சமர்: கிண்ணத்தை கைப்பற்றிய அலையோசை அணி
தமிழர் தாயகமெங்கும் தாயக விளையாட்டுத்துறையில் முன்னெடுக்கப்படும் பெரும் சமர்கள் ஓய்ந்தபாடில்லை.
யாழைத் தொடர்ந்து வவுனியாவிலும் நிகழ்ந்தேறும் பெரும்சமர்கள் போல் ஈழ விடுதலைப்போரின் ஈற்று மூச்சை தாங்கி வலி சுமந்த முல்லையிலும் பெரும் போர்கள் தொடர்ந்து நிகழ்ந்தவாறு இருக்கிறது.
நந்திச் சமரைத் தொடர்ந்து முல்லையின் மகுடம் நடைபெற்றது. இப்போது மற்றொரு பெரும்சமர் தொடங்கிவிட்டது.
அளம்பிலில் இளம்பறைவைகள் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் கிட்டிணன் - காந்தமலர் ஞாபகார்த்த கிண்ணம் 2023 தொடங்கியுள்ளது.
முதல் நாள் போட்டிகள்
இரண்டு படிமுறைகளைச் சுற்றுக்களைக் கொண்ட இந்த சுற்றுப் போட்டியில் முதல் சுற்று விலகல் முறையிலானது. இரண்டாவது சுற்று சுழற்சி முறையிலானது.
முதல் நாள் போட்டிகள் 10.09.2023 அன்று கழக மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் அலையோசை அணியினருடன் இளம் பறவைகள் அணி மோதியது.
முதல் நாள் போட்டியில் உடுப்புக்குளம் அலையோசை அணி எதிர் அளம்பில் இளம் பறவைகள் அணி மோதியது. அலையோசை விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
ஆட்ட நாயகன்
அலையோசை அணியினர் 4.2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று லீக்சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர். இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக 2 கோல்களை போட்ட வீரர் மதுரகன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இளவயதுத் துடிப்போடு விளையாடி வரும் இவர் இந்த போட்டியில் இரண்டு கோல்களை போட்டு ஆட்ட நாயகனாக ஒளிர்ந்தார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
