சுற்றுலா சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பதுளை - கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்திருந்தார்.
இந்நிலையில், கொஸ்லந்த உடடியலும நீர்வீழ்ச்சியில் அனுமதியின்றி பிரவேசித்து இரண்டு இளம் காதலர்களுக்கு அனுமதியின்றி இரவைக்கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகளான இரு இளைஞர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அனுமதிப்பத்திரமின்றி சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்பட்ட இருவரும் கொஸ்லந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் (13.05.2023) பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.
ஹப்புத்தளை, பிதரத்மலேவத்தையைச் சேர்ந்த சௌந்தரராஜ் விமலேந்தர் (வயது 24) மற்றும் பூனாகலை பிரிவு 3, வேல்முடுக்குவ பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனோகரன் (33) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனியார் வைத்தியசாலையில் தாதியாக பயிற்சி பெற்று வந்த மாத்தறை கேகனதுறை பிரதேசத்தை சேர்ந்த கம்மச்சாரியை சேர்ந்த தருஷி கவிஷா (வயது 23) என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், குருநாகல் வாட்டர்ஷெட் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தராக பணிபுரியும் 22 வயதுடைய இளைஞன் காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |