புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்
இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ள 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் புலனாய்வுத்துறைக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளதாக சிங்கள மக்கள் தேர்தல் குறித்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி நம்பிக்கையிழந்து செயற்படுகின்ற போக்கும் தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் தன்னை நோக்கி ஆபத்து நெருங்கி வருவதினை அறிந்து இந்தியா தனக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மறுபுறம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தமக்கு ஆதரவான வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் களநிலவரம் தொடர்பில் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |