மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவது நியாயமில்லை! புபுது ஜாகொட
மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவது நியாயமில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்களிடமிருந்து 800 பில்லியன் வரி செலுத்தப்படாமல் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனி மோசடி போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வரிகள் மீளப் பெறப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உயிரைப்பறிக்க முயற்சிக்கும் அரசாங்கம்
அத்துடன் தேங்காய் எண்ணெய் மோசடிக்கும் பூண்டு மோசடிக்கும் இதே கதியே ஏற்பட்டுள்ளதாகவும் ஜாகொட தெரிவித்துள்ளார்.
எனவே முதலில் நிலுவை வரியை மீட்டெடுக்காமல் வரி செலுத்துவோர் மீது பெரும் சுமையை ஏற்றுவது நியாயமற்றது என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் உயிரைப் பறிக்க முயற்சிப்பதாக நிறுவனங்களுக்கு இடையிலான நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் உயிரைப் பறிக்கிறார்கள்.
மக்களைப் பட்டினி போடப்பார்க்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.