இலங்கையில் குடும்பமொன்றின் வரிச்சுமை 28,000 ரூபாவாக அதிகரிப்பு!
இலங்கையில் குடும்பமொன்றின் வரிச்சுமை 28,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் விதித்துள்ள மறைமுக வரிகளால் வரிச்சுமை அதிகரித்துள்ளது.இலங்கையில் இன்னும் அதிக பணவீக்கம் உள்ளது. இந்த பணவீக்கத்திற்கு முக்கிய காரணம் அரசு விதித்துள்ள அதிகளவு மறைமுக வரிகள் ஆகும்.
சராசரி குடும்பத்தின் வரிச்சுமை
இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சராசரி வரிச்சுமை 42% அதிகரித்துள்ளமை தெரியவந்தது.
இதன் காரணமாக ஒரு சராசரி குடும்பத்தின் வரிச்சுமை 28,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. மிக முக்கியமானது மறைமுக வரி பகுப்பாய்வு.
ஏனென்றால், மறைமுக வரி பகுப்பாய்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை ஒரு வழியில் பாதிக்கின்றது.
மறுபுறம், ஒவ்வொரு நபரும் சேவைகள் மற்றும் பொருட்களைப் பெறும்போது அந்த வரிகளை செலுத்த வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.