இலங்கையில் 1948க்கு பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடி! 30 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 30 பேர் வரை இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 19பேர் தமிழகத்துக்கு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட மேலும் 19 இலங்கைத் தமிழர்களே படகு மூலம் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தமிழகம் தனுஸ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்ததாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசியல் நிலையைக்; கருத்தில் கொண்டு தங்கள் நாட்டில் வாழ்க்கை நடத்த முடியாமல் போனதாக இவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கையில் நெருக்கடி நிலை உருவான உடனேயே, 10 இலங்கையர்கள் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்.
இதன்படி இன்று(12) வரை 29 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
