பொருளாதார சீர்குலைவு மக்களுக்கு பாரிய சவாலாக அமையும்! எம்.ஏ.சுமந்திரன் (Video)
பொருளாதார சீர்குலைவு தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் மக்களுக்கு பாரிய சவாலாக இருக்கும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உடையார் கட்டு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார சிக்கலில் நாடு அகப்பட்டுள்ள நிலையில் பெற்றோருக்கு பிள்ளைகளின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய கஸ்டப்படுகின்றார்கள்.
உணவு
பற்றாக்குறை ஒருபக்கம் புத்தங்கள்,சீருடைகள் பாதணிகள் பெற்றுக்கொடுப்பதில்
மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
ஆகையால் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பு பலரிடத்தில் இருந்து வெகுமதியாக
பணத்தினை பெற்று இவ்வாறு சேவையினை நடத்தி வைத்துள்ளனர்.
இந்த பொருளாதார சீர்குலைவு தொடர்ந்து நிடீக்குமாக இருந்தால் மக்களுக்கு பாரிய சவாலாக இருக்கப்போகின்றது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வருவாய் போதுமானதாக இல்லை.

நாட்டில் 70 சதவீதமானவர்கள் ஒருவேளை சாப்பாட்டினை குறைத்துவிட்டார்கள்.இந்த நிலை இன்னும் மோசமடைகின்றது. வரவு செலவுத்திட்டம் நிவாரண வரவு செலவுத்திட்டமாக இருக்கும் என்று மக்கள் ஏமாந்து இருக்கின்றார்கள் .
அதில் நிவாரணத்திற்கு எதுவும் கிடையாது.பாதுகாப்பு தரப்புக்கான ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் இப்படியான சிறுசிறுதிட்டங்கள் ஊடாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிறு உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri