அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்
நாட்டில் சுமார் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு கடந்த வாரம் இறுதிவரை மத்திய மருந்தகத்தில் (CMS) பூஜ்ஜிய கையிருப்பு நிலைக்கு வந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே, வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் யதார்த்தம் என்பதை இந்தக் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய மருந்துகள்
மயக்க மருந்து, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், சுவாச நோய் மற்றும் நோய்களுக்கு எடுக்கப்படும் மருந்துகள், பொதுவான இதய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள், போன்ற அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் வலி நிவாரணிகள், முற்றிலும் கையிருப்பில் இல்லாமல் போய்விட்டன என்றும் ,மீதமுள்ள மருந்து இருப்புக்கள், போதுமான அளவு கூட இல்லை எனவும் அலுத்கே கூறினார்.
இதனால், ஒரு
மாதத்திற்கு போதுமான மருந்துகளை வழங்க முடியாமல் உள்ளது.
மேலும், நோயாளிகள் தங்கள் மருந்தை தனியார் மருந்தகங்களில் இருந்து பெரும் விலை
கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்றும், பெரும்பாலான நோயாளிகள் தங்கள்
மருந்தைத் தேடி வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மற்றும்
உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு தீர்வு முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளதாக
அலுத்கே தெரிவித்துள்ளார்.