இலங்கையின் பொருளாதார ஏதிலிகள் குறித்து ஆந்திரா பொலிஸாரின் எச்சரிக்கை!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் அங்கிருந்து தப்பி பொருளாதார ஏதிலிகளாக வரலாம் என்ற எச்சரிக்கையை ஆந்திர பிரதேச பொலிஸார் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கரையோரங்கள் மற்றும் கரையோரக் கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆந்திர பிரதேச உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் 974 கிலோமீற்றர் கடற்கரையும், 555 கரையோர கிராமங்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார ஏதிலிகள் இந்த இடங்களுக்கு வரலாம் என்ற அடிப்படையில் புதியவர்களை கண்டால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஆந்திர பிரதேச கடற்தொழிலாளர்களையும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையின் பொருளாதார ஏதிலிகள் பலர் தமிழகத்துக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கையை ஆந்திர பொலிஸார் விடுத்துள்ளனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
