நாடு மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்: நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களைப் போன்றதொரு சவாலான சூழலை மீண்டும் விரைவில் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டர்களை ஒட்டி பொருளாதாரத்தை நடத்துவதை விடுத்து மக்களுக்கு உண்மையை விளக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி
நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |