நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும்
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை
வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் எனவும் ஆங்கில இதழில் தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலை
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் வறட்சி நிலையை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு குறைவதை இது குறிக்கும், அத்துடன் இது முக்கிய பெரும்போக பருவத்தில் சாகுபடிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ விளைவை 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.
இந்த நிலையில் விவசாய திணைக்களமும் விவசாய அமைச்சும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை வகுத்து அடுத்த பெரும் பக்கத்தில் இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
