கனடா இலங்கைக்கு பயண எச்சரிக்கை - ராஜதந்திரத்தை கையாள தயாராகும் இலங்கை
கனேடிய அரசாங்கத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பயண எச்சரிகைக்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து செல்வதாகவும், உணவு, மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் கனடா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனினும் இந்த பயண எச்சரிக்கை நியாயமற்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் பயண எச்சரிக்கை குறித்து ராஜதந்திர அடிப்படையில் பேச உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் இந்த விடயம் பற்றி பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார ஸ்திரமற்ற நிலை நிலவி வருவதாகவும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்து கொள்ளுமாறும் கனடா, தனது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        