நாடு நிலைமை ஜூன் மாதமளவில்தான் சரி வரும்: ரணிலின் சகா பாலித ரங்கே பண்டார
நாட்டின் நிலைமை மே - ஜூன் மாதமளவில் தான் ஓரளவு சரிவரும் என்று நம்புகிறேன் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
பிழையான பொருளாதார முறைமை
உண்மையில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
அதற்குக் காரணம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிழையான பொருளாதார முறைமைதான். எதிர்வரும் ஏப்ரல் புதுவருடம் மக்களுக்குச் கஷ்டமாகவே இருக்கும்.
மே - ஜூன் மாதமளவில் தான் நிலைமை ஓரளவு சரிவரும் என்று நம்புகின்றேன்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியைப் பாரமேற்கும் போது இருந்த நிலைமையை விட நல்ல நிலைமை இப்போது உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
