யாழ்.இந்திய துணைத் தூதரக உயர் அதிகாரிக்கும் வலி.மேற்கு தவிசாளருக்கும் இடையே சந்திப்பு (photos)
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனிற்கும் யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் உயரதிகாரி நாகராஜனிற்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று வலி.மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
இந்த கலந்துரையாடலில் வலி.மேற்கு பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தவருக்கு கடல் உணவுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவுவதற்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.
சித்த, ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வுகள், சித்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அது தொடர்பான பயிற்சி நெறிகளை இந்தியா வழங்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் உட்பட பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
