கிளிநொச்சியில் வாய்களில் கறுப்பு துணிகளை கட்டி கவனயீர்ப்பு போராட்டம்: டக்ளஸ் அளித்த வாக்குறுதி (Photos)
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு இன்று பயணம் செய்த அமைச்சர் குறித்த கடற்றொழிக்கு இடையூறாக அமைந்துள்ள அடடைப்பண்ணைகளை அகற்றக் கோரி இன்று நுாறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தங்களுடைய வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அட்டைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி கிராஞ்சி பகுதியில் தங்களது வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கடலட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி நூறாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற் தொழிலாளர்கள் வாய்களில் கறுப்பு துணிகளை கட்டி தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று (07-01-2023) நூறாவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
கறுப்பு துணி கட்டி எதிர்ப்பு
இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடலட்டை பண்ணைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வினை அடுத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வாய்களில் கறுப்பு துணிகளை கட்டி தமது போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
