சீன அரசாங்கத்தின் அன்பளிப்பு பொருட்கள் அதிபர்களிடம் கையளிப்பு(Photos)
சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் இந்து ஆரம்ப பாடசாலைகளுக்கு சீன அரசாங்கத்தின் அன்பளிப்புப் பொருட்களை சீனா பிரதித் தூதுவர் ஹூ வெய் அதிபர்களிடமும் மாணவர்களிடமும் கையளித்துள்ளார்.
இந்நிகழ்வு சாவகச்சேரி இந்து கல்லூரியில் இன்று (29.12.2022) காலை 10:00 மணிக்கு இடம்பெற்றது.
கற்றல் உபகரணங்கள்
சீன அரசாங்கத்தால் சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான திறன் பலகை (Smart Panel) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாசாலை மாணவர்களுக்காக 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள் என்பவற்றை இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய் இரண்டு பாடசாலைகளினது அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
