கந்தளாய் தள வைத்தியசாலையில் போதைப்பொருளுடன் சிற்றூழியர் கைது
கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியரொருவர் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு நேற்று (07.01.2023) கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த சிற்றூளியரை விசாரணை செய்த போது ஒக்சிஜன் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா 305 கிராம் 250 மில்லி கிரேம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை சிற்றூழியர்
கைது செய்யப்பட்டவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் மெதிரிகிரிய-நவநகர பகுதியைச் சேர்ந்த எம்.தமித்ரங்ககுமார (37வயது) என்பர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கந்தளாய்
தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் இன்றைய தினம் (08.01.2023) கந்தளாய்
நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கந்தளாய்
தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.