இலங்கை கிரிக்கெட் அணி நிச்சயம் உலக கிண்ணத்தை வெல்லும் - மஹேல உறுதி
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ சி சி இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சவாலான போட்டிகள்
மேலும்,“ பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுடன் விளையாடுவது மிகவும் சவாலான விடயம். ஆப்கானிஸ்தான் உடனான முதலாவது போட்டியில் தோற்றாலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மாபெரும் வெற்றியை நம் அணியினர் பதிவு செய்தனர்.
தசுன் சானகவின் தலைமைத்துவம்
தசுன் சானகவின் நம்பிக்கை நிச்சயமாக வளர்ச்சியடையும். விளையாட்டு மைதானத்திற்குள் வீரர்கள் தசுன் சானகவின் தலைமைத்துவத்தை நம்புகின்றார்கள்.
அது மிகவும் சிறந்த விடயம். நான் அவரை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தலைவர் என்ற ரீதியில் கடந்த சில வருடங்கள் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் இறுதியில் ஆசிய கிண்ணத்தை வெற்றி கொண்டார். அது மிகவும் விசேடமானது.
உலக கிண்ண போட்டியிலும் இலங்கை அணி நிச்சயமாக கிண்ணத்தை வெல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
