இலங்கையில் சடுதியாக உயர்வடைந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் இன்று மேலும் 992 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று இதுவரை மொத்தமாக 2, 573 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று (10) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
அத்துடன் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல், போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
