இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் தாண்டவமாடும் புதிய கோவிட் கொத்தணியான 'புத்தாண்டுக் கொத்தணி'யில் நாட்டில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையான கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.
இன்று மாத்திரம் 1,636 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ந்து நான்கு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 120 ஆக எகிறியுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்வடைந்துள்ளது.
11 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
