கோவிட் தொற்றுக்கு எதிராக பொது நடவடிக்கைகள் தொடர்பில் புதிய அறிவுறுத்தல்
கோவிட் தொற்றுக்கு எதிராக பொது நடவடிக்கைகள் தொடர்பில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
நாட்டில் தொற்றுநோய் நிலைமை அவ்வப்போது மாறுபடும். மேலும் செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையையும் மாற்ற வேண்டியிருக்கும் என்று முதன்மை சுகாதார, தொற்றுநோய் மற்றும் நோய் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வெளியிட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மே 31 வரை நடைமுறையில் இருக்கும். இதேவேளை இலங்கையில் பொது மற்றும் பணிகளின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை நிலை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
எச்சரிக்கை நிலை 1 - அறிக்கையிடப்பட்ட கோவிட் தொற்றுக்கள். நாட்டிற்கு
வெளியில் இருந்து வருபவர்கள் மட்டுமே (தனிமைப்படுத்தலில் கண்டறியப்பட்டது) கொத்தணிகள் இல்லை.
எச்சரிக்கை நிலை 2 – தொற்றுக்களின் ஒரு கொத்தணி.
எச்சரிக்கை நிலை 3 - வெவ்வேறு மாவட்டங்களில் பல கொத்தணிகள்.
எச்சரிக்கை நிலை 4 - எந்தவொரு கொத்தணியும் தொடர்புகள் எதுவும் இல்லாமல் தொற்றுக்கள் தோன்றும்.
இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட படி, இலங்கை தற்போது எச்சரிக்கை நிலை 3 இல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam