இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்கள்! இன்றும் 19 பேர் பலி
நாட்டில் இன்று 19 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கோவிட் மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது.
இதற்கமைய,இலங்கையில் மேலும் 792 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று இதுவரையில் 1,889 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 121,313 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 878 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 101,763 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 745 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
