கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனம்! 60 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ள அரசாங்கம்
மதுபான போத்தல்களில் ஒட்டும் பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 60 பில்லியன் ரூபா வருடாந்த வருமானம் இழப்பு ஏற்படுவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில்,இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு பாதுகாப்பு ஸ்டிக்கர் அம்சம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், கலால் திணைக்களம் வருடாந்தம் 40 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது.

பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டம்
இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர் வேலைத்திட்டம் போலியான பொருட்களை அடையாளம் காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின காரணமாக அரசுக்கு 60 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு உரிய டெண்டரை வழங்கிய பிரபல நிறுவனம், உலகின் மூன்று நாடுகளில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு இந்த டெண்டரை வழங்கியமைக்கு நிதி மற்றும் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரன, தனியார் துறையில் உள்ள சில மதுபான நிறுவனங்கள் இந்த போலி ஸ்டிக்கர்களை பிரதானமாக இரசாயன ரீதியில் மேம்படுத்தப்பட்ட பிசின்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த காலம் விரைவில் முடிவடைய உள்ளதுடன், இருப்பினும் கலால் துறை அதிகாரிகள் அதே நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டரை கொடுத்து இந்த ஊழலை தொடர கடுமையாக முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri