புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்! யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியாகியிருந்தன.
இந்நிலையில் வெளியான புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மூன்று இலட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, 14.64% மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகனை பெற்றுள்ளனர்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை – 17,622 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 என்பதுடன், 15.6% சதவீதமாக பதிவாகியுள்ளது.
யாழ். கல்வி வலயம் – (25.37%) – 1
பொலநறுவை வலயம் – (21.71%) – 2
தங்காலை வலயம் – (21.51%) – 3
கம்பஹா கல்வி வலயம் – (21.44%) – 4
வலஸ்முல்ல வலயம் – (20.80%) – 5
பதுளை கல்வி வலயம் – (20.41%) – 6
நிக்கரவெட்டிய வலயம் – (20.03%) – 7

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
