இலங்கை - சீனாவிற்கு இடையிலான பாரம்பரிய நட்புறவு தொடர்பில் வஜிர கூறியுள்ள விடயம்
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்ட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை - சீன உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவருடன் நேற்று (16.11.2022) இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அபேவர்தன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இரு நாடுகளுக்குமான உறவு

1952ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட ரப்பர் - அரிசி ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்ததாக இந்த சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்படவுள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan