இலங்கையில் போராட்டங்களுக்கு இடமளிக்கவேண்டும் என்று கனடா கோரிக்கை!
இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களுடன் தாம் ஒற்றுமையாக இருப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கையில் தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா உட்பட பல நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
இலங்கைக்கு செல்லும் கனேடியர்கள் உயர் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொள்ளவேண்டும்
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும்,
அதேநேரம் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் கனடா குறிப்பிட்டுள்ளது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
