வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையிலிருந்து அபுதாபிக்கு தொழிலுக்காக சென்ற இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி - பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் குறித்த இளைஞன் பணிபுரிந்துள்ளார்.
உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில், இவர் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பெடுத்து தொடர்பை பேணி வந்துள்ளதுடன், கடந்த 6 ஆம் திகதி முதல் அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (16) குறித்த இளைஞன் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை என்றும் அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு அந்நாட்டு அரசிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |