உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை! ஸ்கொட்லேன்ட் யாரட்டின் உதவி கோரல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை மறுஆய்வு செய்யவும், குண்டுவெடிப்புகளின் பின்னணி குறித்து கண்டறியவும் ஸ்கொட்லேன்ட் யாரட்டின் உதவி கோரப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்து இறுதி முடிவுக்கு வருமாறு ஸ்கொட்லாந்து யார்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிர்வாக அதிகாரி சமந்தா பவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மூன்று ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
1,215 சாட்சிகள் சமர்ப்பிப்பு
267 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட 8 தற்கொலைப் படை தீவிரவாதிகளும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக 23,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.மேலும் 1,215 சாட்சிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்புகளுடன் உள்ளூர் பயங்கரவாதக் குழுவுக்கு தொடர்பு இருந்தபோதும்,
மறைந்திருந்த ஒரு தரப்பும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டு வருகிறது
அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு அரசியல் பங்கு இருப்பதாகவும் ஊகங்கள் எழுந்தன.
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan