தொடருந்து தண்டவாளத்தில் பயணித்த பேருந்தினால் குழப்பம்
தொடருந்து தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு பேருந்தினை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடும் வாகன நெரிசல்
புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டமையினால் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து செல்லும் நோக்கில் தண்டவாளத்தில் பேருந்தினை சாரதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam