காங்கேசன்துறை - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை: ஆரம்ப திகதி குறித்து வெளியான தகவல்
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,
ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கப்பல் சேவை ஆரம்பிக்கும் முயற்சிகள்
இத்திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் இந்தியா சென்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
