புலிகளுக்கான பாலத்தில் மாட்டிய ரணில்: இந்திய விஜயத்தின் புதிய அதிர்வு!(Video)
தனது ராஜதந்திர பொறிக்குள் இலங்கையை சிக்கவைக்கும் வகையிலான முடிவுகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை நாட்டுக்கு அனுப்பிவைத்த இந்தியா, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ''de pactos'' அரசு இருந்தவேளையிலேயே இந்திய - இலங்கை பாலம் தொடர்பான விடயம் ரணிலினால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்ற கருத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்திய சீன காய் நகர்த்தல்களுக்குள் பயணிக்கும் இலங்கையானது , இரு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று நகரும் பொருளாதார பாதையை கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற அரக்கலயா போராட்டத்தின் முடிவில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க முதன் முறையாக இந்தியாவிற்கான விஜயமொன்றை கடந்த 21.07.2023 அன்று மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் முடிவில் இந்திய - இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் இலங்கை அரசியலின் எதிர்கால திட்டங்களில் இந்தியாவின் நகர்வு எவ்வாறானது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி, எதிர்வரும் 26 ஆம் திகதி 13 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பிலான அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டம் தொடர்பான அறிவிப்பானது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் நாட்டின் நாடாளுமனற எம். பிக்களுக்கு எதுத்துறைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் ரணிலின் குறித்த விஜயத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலம் அமைக்கும் விவகாரத்தை இந்திய பிரதமர் மோடி பகிரங்க படுத்தியிருந்தாலும், அதற்கான ஆரம்ப பேச்சை 2000 ஆண்டளவில் எடுத்துரைத்தவர் ரணில் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினைக் குவாத்ரா பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அப்படியானால் அக்காலகட்டத்தில் வடக்கில் தனது ஆளுகையை நிலைநாட்டியிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் நடைமுறை அரசு இருந்த வேளை ரணில் இந்தியாவிடம் பாலமமைக்கை ஒத்துக்கொண்டதன் பின்புலம் என்னவாக இருக்க கூடும்...
இவ்வாறான ரணிலின் இந்திய விஜயத்தின் பின்னணியையும், இலங்கை தொடர்பில் இந்தியா திட்டமிட்டுள்ள உள்நோக்கங்களையும் அலசி ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |