வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி விஜயம்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத்தின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சவூதியில் அலி சப்ரி தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் முக்கியஸ்தர்கள் பலருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
