கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாடசாலை மாணவனின் செயலால் ஏற்பட்ட குழப்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் எச்சரிக்கை
இந்த மாணவர் நேற்று அவசர அழைப்புப்பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பின்படி, அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் அழைத்து, தான் செய்தது நகைச்சுவை என்று கூறியுள்ளார்.
களுபோவில, சுனந்தராம வீதியைச் சேர்ந்த மாணவனிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவவில்லையென்றாலும் நாம் உதவவேண்டும்: பிரித்தானிய முன்னாள் ராணுவத் தளபதி News Lankasri
