இலங்கைக்கு முதன்முறையாக “எயாா் பிரான்ஸ்“ விமானச்சேவை. “சுவிஸ் எயார்“ சேவையும் ஆரம்பம்
சுமாா் 30 வருடங்களுக்கு பின்னா், இலங்கைக்கு முதல் தடவையாக “எயாா் பிரான்ஸ்“ நேரடிப் பயணிகள் விமானச் சேவை இன்று ஆரம்பமாகிறது.
முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25க்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்படவுள்ளது.
வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்த சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாத் பெருந்தொற்றுக்கு பின்னா் சுவிஸ்எயாா் இன்று தமது சேவையை கொழும்புக்கு ஆரம்பித்துள்ளது. இதன்படி சூாிச்சில் இருந்து முதல் விமானம் இன்று காலை கட்டுநாயக்கவையை வந்தடைந்தது,
8023 கிலோமீற்றா் துாரத்தைக்கொண்ட இந்தப்பயணத்துக்கு 9 மணித்தியாலம் 56 நிமிடங்கள் செல்வதாக இலங்கையின் சுறறுலாத்துறை அமைச்சு தொிவித்துள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam