இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும்! அமெரிக்காவிடம் சிறீதரன் வேண்டுகோள்
இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) வலியுறுத்தியுள்ளார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றபோதே, மேற்குறித்த விடயத்தைச் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தினார்.
இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல்
இந்தச் சந்திப்பின்போது, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியமின்மைகள் எழும்போது அது சார்ந்த அரசியல் நகர்வுகளின் தேவைப்பாடு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், அமெரிக்கத் தூதுவருடனான இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri