வடக்கில் படையினர் அபகரித்த பல்லாயிரம் ஏக்கர் காணி : நாடாளுமன்றில் அம்பலமான தகவல்(Video)
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(18.10.2023) இடம்பெற்ற சபை விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
"வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகத் திரட்ட முடிந்த தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்துள்ளேன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.