யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் போராட்டக் களத்தில் சிறீதரன் எம்.பி
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை எனக் கூறியும் வடக்கு மாகாண ஆசிரியர்கள் நேற்று(13) திங்கட்கிழமை முதல் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்வு
இந்தநிலையில் இன்று(14) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து தாம் வடக்கு மாகாண ஆளுநருடன் பேசி தீர்வுகளைப் பெற்று தருவதாக ஆசியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
