போராட்டக்காரர்களின் மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்துள்ளது.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் கடந்த ஆண்டின் மே மாதம் 04ம் திகதி நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் பொலிஸாரின் தலையீடு காரணமாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு கட்டத்தில் கலைந்து போகச் செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்களின் மனுக்கள் விசாரணை
இதன்போது பொலிஸார் தங்கள் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாகவும், வன்முறையைப் பிரயோகித்துள்ளதாகவும் உத்தரவிடுமாறு கோரி போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
எனினும் அரசாங்க தரப்பில் போராட்டக்காரர்கள் அன்றைய தினம் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும், வன்முறைத்தனமாகவும் நடந்து கொண்டதை காணொளிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
அதனையடுத்து போராட்டக்காரர்களின் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
