அதிகாரபலத்துடன் எரிவாயு பெற முயன்ற பொலிஸார்! விரட்டியடித்த பொதுமக்கள்
வரிசையில் நிற்காது அதிகார பலத்துடன் குறுக்கு வழியில் எரிவாயு பெற்றுக்கொள்ள முயன்ற பொலிஸாரை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
பாணந்துறை - மோதரவில பிரதேசத்தில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையமொன்றுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து பொதுமக்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
பொதுமக்கள் உரத்த குரலில் எதிர்ப்பு
இந்நிலையில் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதும் வாகனமொன்றில் வந்த பொலிஸார் தாங்கள் எடுத்து வந்த வெற்று சிலிண்டர்களுக்கு வரிசையில் நிற்காமல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுள்ளனர்.

அதனையடுத்து பொலிஸாரின் வாகனத்தை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் உரத்த குரலில் எதிர்ப்பை வெளிக்காட்டியதையடுத்து பொலிஸார் தங்கள் முயற்சியைக் கைவிட்டு வெற்று சிலிண்டர்களுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri