யாழ். ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவ பெருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவ பெருவிழா சிறப்பாக இடம்பெற்றள்ளது.
ஸ்ரீ பொன்னாலை வரதராஜப் பெருமாளின் இரதோற்சவமானது இன்று (06.09.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இரதோற்சவம்
அதனை தொடர்ந்து மாயவன், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தேரேறி வெளிவீதி உலா வந்து கிருஷ்ண பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் உற்சவத்தில் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு, கிருஷ்ணப்பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றதுடன் பல பக்தர்கள் தூக்குகாவடி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
இவ் ஆலயத்தின் பிரம்மோற்சவம் கடந்த (22.08.2023) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நாளை(07.09.2023) மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
