வெளிநாடொன்றில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்
சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொழிற்பயிற்சி நிலையம்

மேலும், சவுதி அரேபியாவில் பயிற்றப்பட்ட பணியாளர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. இலங்கை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்குத் தொழிற்பயிற்சி நிலையமொன்றை உருவாக்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவுக்கு தான் முன்மொழிந்துள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான எதிர்கால முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் சபாநாயகருடனான கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri