கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குழுவொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார், இஸ்மோக்கன் துறை முனைக்கு அருகில் வைத்து நேற்று (05.05.2023) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்கள் நால்வரையும் இரண்டு பெண்களையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்களில் 7 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் 16 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய படகின் சாரதியும் அடங்குவார்.
இந்தக் குழுவினர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.