கொவிட் தொற்றின் ஆபத்தை மறந்து போன இலங்கை மக்கள்
இலங்கையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மக்கள் பெருமளவில் குவிந்து காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
களனி புதிய பாளம் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது.
பல பிரதேசங்களில் பொது போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய செயற்பட ஆரம்பித்துள்ளன. எனினும் மக்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது கொவிட் தொற்றின் ஆபத்தினை மறந்து செயற்படுவது தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நாட்களில் பேருந்துகளில் பயணிகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் உட்பட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
