இலங்கையில் வரி செலுத்துவோருக்கு இறுதி திகதி! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான அறிக்கையை வரிக் செலுத்துவோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கை
எனவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படும் வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.