இலங்கை மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை
இலங்கை வாழ் மக்கள் முழுமையான சுதந்திரத்தை இன்னமும் அடையவில்லை என கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.
சட்டம் சமமாகவும் நீதியுடனும் செயல்படும் சமூகம்தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, பொருளாதாரம், அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
உண்மையான சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல; அது நீதியும், சமத்துவமும், பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri