தமிழகத்தில் 07 இலங்கையர்கள் தஞ்சம்
இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து இவர்களை அழைத்துச்சென்ற படகோட்டிகள், தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் அவர்களை இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இந்நிலையில் தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை மீட்டு, மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் , திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வருமே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.
தஞ்சமடைவதற்கான காரணம்
பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம்
முதல் இதுவரை 123 பேர் தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.