தென்னிலங்கை அமைச்சரை கண்ணீர் விட்டு கதற வைத்த பொது மக்கள்
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வீடு இன்று பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என கூறி பொது மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தனது வீட்டை சுற்றி போராட்டம் நடத்த வேண்டாம் என என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பொது மக்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“எனது வீட்டை முற்றுகையிடாதீர்கள். எனக்கு ஒரு சிறு குழந்தை உள்ளது. வீடு முற்றுகையிட்ட நேரம் முதல் எனது குழந்தை சாப்பிடவில்லை. குழந்தை இன்னமும் பயத்திலேயே உள்ளது. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்வோம்.
வீட்டை சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் என்னை சந்திக்கு வருமாறு சவால் விடுத்தனர். நான் இன்று அந்த இடத்திற்கு சென்றேன். அத்துடன் வீட்டை சுற்றி ஊ கூச்சலிட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்தேன்.எவ்வாறான நிலையிலும் தைரியத்துடன் எனது பயணத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
