இலங்கையில் வருடாந்தம் 19 ஆயிரம் பேர் இறக்கும் அபாயம்
இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை எதிர்கொள்ளும்
நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகள் உள்ளன.
புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதுடன், தேசிய மற்றும் சர்வதேச ஆதரவையும் பெற எதிர்பார்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கான ஆரம்பிக்கப்பட்ட சுகாதார கல்வித் திட்டங்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெண்களிடையே மரண வீதம்
இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுகின்றனர்.
அவ்வாறு பதிவாகும் பெரும்பாலான புற்றுநோயாளர்கள் வாய் மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
